அரவிந்த் சாமி அமலா பால் நடிக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. நயன்தாரா, 'பேபி ' அனிகா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தை சித்திக் இயக்கியிருந்தார்.

இயக்குனர் சித்திக் அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார். முதலில் ரஜினி நடிப்பதாக இருந்த இத்திரைப்படம் அவர் விலகியதால் அரவிந்தசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அரவிந்தசாமி, அமலாபால், சூரி, ரமேஷ் கண்ணா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்டு தற்போது மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.