ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகிறது சாய் பல்லவி நடிக்கும் 'தியா'


பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமானவர் சாய் பல்லவி. தமிழில் அவர் அறிமுகமாகவிருக்கும் படம் 'கரு'. தற்போது இப்படத்தின் பெயரை 'தியா' என்று மாற்றியுள்ளனர்.   ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது. திரைத்துறையின் வேலைநிறுத்தம் காரணமாக மேலும் தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.