அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ரிலீஸ் தேதி இதோ


மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா ஆகியோர் நடிக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

தில்லி பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.