அருள்நிதியுடன் மோதும் விஷாலின் இரும்புத்திரை


விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படமும் அருள்நிதி நடித்துள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படமும் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றன.

துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடிகர் விஷாலே தயாரிக்கிறார். இரும்புத்திரை படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

முதலில்  இந்த படம் தற்போது மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரைத்துறையின் வேலைநிறுத்தம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படம் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.