அனைவரும் எதிர்பார்த்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அவர் அடுத்ததாக இயக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 'சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்த வைபவி, சந்திரிகா, சதிஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'ஹரஹர மகாதேவகி' படத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு இருந்ததை தொடர்ந்து இந்த படமும் அதே பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.