மொழி பட இயக்குனருடன் ஜோதிகா இணையும் படத்தின் டைட்டில் வெளியானது


ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ், ஸ்வர்ண மால்யா ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் மொழி. வாய் பேச முடியாதவராக ஜோதிகா நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் ஜோதிகா. இப்படம் இந்தியில் வித்யா பாலன் நடித்து வெற்றி பெற்ற 'துமாரி சுலு' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

விதார்த் இப்படத்தில் ஜோதிகாவின் கணவர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'காற்றின் மொழி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்பெயர் 'மொழி' படத்தில் வரும் பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.