காலா படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி சேனல்


கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் காலா.  ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. முதலில் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு திரைத்துறையின் ஸ்டிரைக் மற்றும் சில காரணங்களால் ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.