விஜய் ஆண்டனியின் காளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


அண்ணாதுரை படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்குகிறார்.

சுனைனா, ஷில்பா, அம்ரிதா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார்.

இப்படம் முதலில் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சில பிரச்சனைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மே 18ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.