'மெர்குரி' படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்


பீட்ஸா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களும் வெற்றியை பெற்றுத்தந்தன.

இறைவி படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெர்குரி. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார். 'பெண் ஸ்டுடியோஸ்' மற்றும் 'ஸ்டோன் பெஞ்ச்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வெளியானது. திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக ஏப்ரல் 20ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் ரஜினியை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.