ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்காக அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு வந்தார். இறுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது.

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.