அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்திற்கு கிடைத்த கௌரவம் ! ரசிகர்கள் பெருமிதம்


நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், சிறியரக விமானங்களை உருவாக்குவது என பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும்,  அந்த அமைப்பின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமான தொடர்பான போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் சென்னை MIT சார்பில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் வாங்கும் சம்பளம் வெறும் 1000 மட்டுமே. அதையும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிவிடுமாறு கூறியுள்ளார்.