கமல்ஹாசன் வெளியிட்ட 'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியின் டீஸர்


கடந்த ஆண்டு விஜய் டி.வி யில் நடைபெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகை ஓவியா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதான் புகழ் பெற்றார். 

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். ஓவியா ஆர்மி என்று ஒரு குழு ஏற்படுத்தி ஓவியாவிற்கு வாக்களிள்த்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ளது. 

தற்போதும் அந்த நிகழ்ச்சியை கமலஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இன்று பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீஸரை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.