நடிகர் ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் !


நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த வேளைகளில் ஈடுபட்டுள்ளார்.

அவரின் அரசியல் அறிவிப்புக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவந்தனர். அவர் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பியிருந்த ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தான் இதையும் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.