தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு


நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் சினிமாக்களை தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். அவர் முதல் முறையாக நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம்  'The Extraordinary Journey Of The Fakir'.

சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை நடிகர் தனுஷ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு 'வாழ்க்கைய தேடி நானும் போனேன் ' என்று பெயர் சூட்டியுள்ளனர். இது தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.