விஷாலின் இரும்புத்திரைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி


'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடிகர் விஷாலே தயாரிக்கிறார். இரும்புத்திரை படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் மாறும் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் ஆதார், டிஜிட்டல் இந்தியா  பற்றிய வசனங்கள் வருவதாக கூறி இப்படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது எனக்கூறி வழக்கை  தள்ளுபடி செய்தது.