நேரடி ஒளிபரப்பில் காலா இசை வெளியீடு செய்த சாதனை


பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினியின் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாக பார்த்தனர். இசை வெளியீட்டு விழாவா இல்லை மாநாடா என்று என்னும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் நேரடி ஒளிபரப்பை ஆன்லைனில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 50லட்சத்திற்கும் அதிகம் என்று facebook இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை தவிர ட்விட்டர் இந்தியா நிறுவனம் நேரடி ஒளிபரப்பை ஷேர் செய்தது. இதுவரை எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கும் இல்லாத அளவிற்கு அதிகமான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துள்ளனர்.