நயன்தாரா யோகி பாபு இணைந்து கலக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண கனவு' டீஸர்


வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு கோலமாவு கோகிலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் வரும் கல்யாண வயசு பாடலின் டீசரை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டார்.

யோகி பாபு நயன்தாரா பேசிக்கொள்ளும் இந்த காமெடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.