சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா இயக்கும் கனா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு



நடிகர் சிவர்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்கும் படத்திற்கு கனா என்று பெயர் சூட்டியுள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இவர் ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா முதன் முதலாக இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, தர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர். பெண்கள் கிரிக்கெட் பற்றிய கதைக்களம் கொண்ட படம் என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.