மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


வேலைக்காரன் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

சீமராஜா படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சதிஷ் முக்கிய  கேரக்டரில் நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.