மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மங்கியது


நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த ஐ.பி.எல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.  முதலில் பேட் செய்த மும்பை அணி தொடக்கம் சரியாக இருந்தாலும் பின்னல் வந்த வீரர்கள் சரியாக ஆடாததால் 168 ரன்கள் மட்டுமே எடுத்து. அந்த அணியின் லீவிஸ் 60 ரங்களும் சூர்யகுமார் யாதவ் 38 ரங்களும் ஹர்டிக் பாண்டியா 36 ரங்களும் எடுத்தனர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தாலும் பட்லரும், ரஹானேவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 18 ஓவரிலேயே அந்த அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் பட்லர் ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு குறைந்தது. இனி மும்பை மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணியின் தோல்விக்காக காத்திருக்க வேண்டிய நிலை வரும்.