என் மீதான விமர்சனங்களுக்கு ரசிகர்கள் பதில் கூற வேண்டாம்: ரஜினி


நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அவரை பற்றி பலரும் விமர்சனம் செய்துவந்தனர். ஆனால் அவர் அதுபற்றி கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேளைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு பக்கம் சினிமா  மறு பக்கம் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் என பிசியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் ரஜினி. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

அதில் 'என் மீதான விமர்சனங்களுக்கு யாரும் தனிப்பட்ட முறையில் பதில் கூற வேண்டாம். மேடையில் மற்ற காட்சிகள் குறித்து விமர்சிக்க வேண்டாம். நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை ஆக்கப்பூர்வமாக தெரிவிக்கலாம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.