'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு


'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அவர் அடுத்ததாக இயக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 'சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்த வைபவி, சந்திரிகா, சதிஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'ஹரஹர மகாதேவகி' படத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு இருந்ததை தொடர்ந்து இந்த படமும் அதே பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 4 வெளியானது. 

இந்த படத்தின் வசூல் அதிகரித்துவந்தாலும் இந்த படத்தை பலரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் பா.மா.க நிறுவனர் டாக்டர் ராமதாசும் இணைந்துள்ளார். இந்த படத்தின் வெற்றி மற்ற தயாரிப்பாளர்களையும் இதே போன்ற படங்களை எடுக்க தூண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: