M.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்கியது


சீமராஜா படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, யோகி பாபு ஆகியோர் நடிக்கும் படம் சீமா ராஜா.

இப்படத்தை தொடர்ந்து 'நேற்று இன்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதற்குமுன் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சதிஷ் முக்கிய    கேரக்டரில் நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.