விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு


ஹரி இயக்கத்தில் விக்ரம் த்ரிஷா விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சாமி.  தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.

இந்த படத்தில் நாயகியாக த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென த்ரிஷா படத்திலிருந்து விலகினார்.


இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். இப்படத்தின்  ட்ரைலெர் வரும் மே 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.