'மாரி 2' ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி


பிரேமம் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் சாய் பல்லவி. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் அவருக்கு அந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது அவர் தமிழில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த தியா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் தனுஷ் ஜோடியாக நடித்துவரும் மாரி 2 ஷூட்டிங்கில் அவரின் 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.