சீமராஜா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சிவகார்த்திகேயன்


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம்  மூன்றாவது முறையாக சீமராஜா படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். 

இப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று சிவகார்த்திகேயன் அவர் சம்மந்தப்பட்ட கட்சிகளுக்கு டப்பிங் பணிகளை தொடங்கினார்.