சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு


தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதான் மூலம் தமிழ் அறிமுகமானார் நடிகை சன்னி லியோன். இந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

இந்த படம் சரித்திர படமாக உருவாகிவருகிறது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்த படத்திற்கு 'வீரமாதேவி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.