தொடங்கியது 'தல' அஜித்தின் விசுவாசம் திரைப்படம் !


விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். 

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.  பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. அந்த புகைப்படங்கள் அவர் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் செல்லும் போது எடுக்கப்பட்டவை. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.