அஜித்துடன் ரோபோ சங்கர்: வைரலாகும் 'விசுவாசம்' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்


விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். 

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அஜித் நயன்தாரா பங்குபெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விசுவாசம் படப்பிடிப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை அனைவரும் ஆவலுடன் பகிர்ந்து வருகின்றனர்.