முதன் முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்தசாமி புகைப்படம் உள்ளே


90களில் தமிழ் சினிமாவின் காதல் நாயகனாக வளம் வந்தவர் நடிகர் அரவிந்தசாமி. ரஜினியின் தளபதி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தவர் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அவருக்கு அதிகம்.

அரவிந்த் சாமி போல் மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்கும் அளவிற்கு புகழ்பெற்ற நாயகனாக வளம் வந்தவர். சிறிது காலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தவர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்த அரவிந்தசாமி தனது மகனின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்டுள்ளார். கல்லூரியில் பட்டம் பெற்ற தனது மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.