சன் ரைசர்சை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை


நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்சை எளிதில் வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை அணி. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்து.

அந்த அணியில் தவான் 79 ரங்களும், வில்லியம்சன் 51 ரங்களும் எடுத்து அந்த அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

அதிரடியாக ஆடிய அம்பதி ராயுடு 62 பந்துகளில் 100 அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஷேன் வாட்சன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.  இதன் மூலம் 16 புள்ளிகள் எடுத்த சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தற்போது சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில்  உள்ளது.