கேன்ஸ் பட விழாவில் தனுஷ்: வைரல் புகைப்படங்கள் உள்ளே


நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் சினிமாக்களை தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். அவர் முதல் முறையாக நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம்  'The Extraordinary Journey Of The Fakir'.

சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை நடிகர் தனுஷ் கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டிருந்தார். 

தற்போது இவ்விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் தனுஷும் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் இயக்குனரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.